ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 11, 2022) புதிய வேலைகள் உங்களை தேடி வரலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 11, 2022) புதிய வேலைகள் உங்களை தேடி வரலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

சில தனிப்பட்ட விஷயங்களில் யோசித்து முடிவு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். அது போன்ற சமயங்களில் உங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது நல்லது. விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் உண்டாகும். வேலை சம்பந்தமாக நீண்ட நாட்களாக தீட்டி வந்த திட்டத்தை இன்று செயல்படுத்த உகந்த நாள். உங்களை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள சிலர் ஆர்வம் காட்டுவார்கள்.

அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – முகமூடி

ரிஷபம்:

நிறுவனங்களில் சில முக்கிய வேலைகளை செய்து முடிக்க உங்களை தேர்வு செய்வார்கள். உங்கள் திறமையை உணர்ந்து வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வெற்றி ஈட்டுவீர்கள். பிரகாசமான வாய்ப்புகள் கண் முன்னே வந்து நிற்கும். பெற்றோர்களின் பூரண ஆசை பெறுவீர்கள். உங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கு உதவி செய்ய யாரேனும் ஒருவர் முன் வருவர்.

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – குழாய் கிணறு

மிதுனம்:

தொழில் செய்ய ஆசைப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதனை செம்மைப்படுத்திக் கொள்ள கடுமையான உழைப்பை மேற்கொள்வீர்கள். வெற்றியைத் தவிர வேறு எந்த சிந்தனையுமின்றி செயல்படுவீர்கள். தொழிலைப் பற்றி நீங்கள் திட்டியுள்ள எதிர்கால திட்டங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. தேவையான அளவு சேமிப்பு உங்களிடம் இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – ஸ்போர்ட்ஸ் மாடல்

கடகம்:

உங்கள் சிந்தனைகளை பற்றி ஒரு தெளிவு உண்டாகும். அதன் மூலம் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பீர்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த அங்கீகாரம் கிடைக்கும்.

உங்கள அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - பீங்கான் குவளை

சிம்மம்:

தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கே தெரியாமல் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இன்று நாள் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும். உணர்வு ரீதியாக சற்று வலிமை குறைந்து காணப்படுவீர்கள். முடிவுகள் எடுப்பதை சற்று தள்ளிப் போடுவது நல்லது. மூச்சுப் பயிற்சி செய்வது நல்லது.

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சிவப்பு நிறம்

கன்னி:

நீங்கள் நினைத்து கூட பார்த்திராத முக்கியமான நல்ல விஷயம் ஒன்று உங்களைத் தேடி வரும். அதனை உன்னிப்பாக கவனித்து சரியான விதத்தில் கையாளுவதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சரியான நபர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஆனால் இறுதி முடிவு உங்கள் முடிவாக இருக்க வேண்டும். சட்டத்துறையில் இருப்பவர்களுக்கு சவாலான நாளாக அமையும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு- ஸ்மார்ட் வாட்ச்

துலாம்:

போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதை இன்று குறைத்துக் கொள்வது நல்லது. ஒப்பந்தம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அதிகம் கவனம் தேவை. உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களிடம் அறிவுரை கேட்டு உங்களை அணுகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு ஏற்படலாம். ஆனால் அது தற்காலிகமான ஒன்றாகவே இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வடிவமைக்கப்பட்ட குஷன்

விருச்சிகம்:

சமூகத்தில் உங்களுக்குள்ள தொடர்புகளின் மூலம் புதிய நன்மைகள் உண்டாகும். அதே சமயத்தில் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு என்று சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் நன்மைகள் உண்டாகும். சொத்துக்களை விற்பது தொடர்பாக பேச்சுகளை தொடங்குவதற்கு நல்ல நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - எம்பிராய்டரி வேலை

தனுசு:

சில வேலைகளை முடிக்க முடியாத சூழல் உண்டாக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு வேலையில் முழு முனைப்போடு செயல்படுவதன் மூலம் முடிக்க முடியாத செயல்களையும் முடித்துக் காட்டுவீர்கள். பதட்டப்படாமல் செயல்களை செய்ய வேண்டும். புதிய வாய்ப்புகளைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் அவற்றை நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும். இப்போது எடுக்கும் சில முக்கிய முடிவுகளின் மூலம் எதிர்காலத்தில் பல நன்மைகள் வந்து சேரும்

உங்களது அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – மயில்

மகரம்:

கடந்த காலங்களில் நடந்த அதே அனுபவம் மீண்டும் நடக்கலாம். ஆனால் அதைப் பற்றி பயம் கொள்ள தேவையில்லை. புதிய நிகழ்வுகளின் மூலம் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். அலுவலகத்தில் முக்கிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நேர்மையுடன் வெளிப்படையாக இருப்பதன் மூலம் பலரின் பாராட்டை பெறுவீர்கள்.

உங்கள அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு பிரபலம்

கும்பம்:

நீங்கள் தனித்துவிடப்படுவதை பற்றி அதிக பயம் கொள்வீர்கள். ஆனால் நேரம் உங்களுக்கு சாதகமாக அமைந்து அனைத்தும் நல்ல விதமாக மாறும். கடந்த காலங்களை நன்றாக ஆராய்ந்து அதன் மூலம் பாடங்களை கற்றுக் கொள்வது நல்லது. ஆன்மீகப் பாதையில் ஆர்வம் உண்டாகி சில பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் நண்பர்களின் மூலம் நீங்கள் இழந்த அதே தன்னம்பிக்கை மற்றும் சக்தியை பெறுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு – பேன்சி கார்

மீனம்:

திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கை கூடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை துணையினை எந்த வித சந்தேகமுமின்றி மிக எளிதாக தேர்ந்தெடுப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இந்த விஷயத்தில் உங்களுக்கு கெடுதல் செய்ய முயற்சி செய்யலாம். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருந்து அவர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். எதிர்மறையான சிந்தனைகளுடன் செயல்பட்டால் வாழ்வில் சில பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறக்க வேண்டாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - வாழ்க்கை மரம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News