மேஷம்:
இன்றைக்கு மேன்மை நிறைந்த நாளாக அமையும். நீங்கள் மேற்கொண்டிருந்த முதலீடுகளின் மூலம் வருமானத்தைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். யாராவது உங்களை ஏதாவது குற்றம் சாட்டினால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண் பானை
ரிஷபம்:
இன்றைக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உங்களது பணியில் கவனமுடன் இருக்கவும். குழந்தைகள் மன அழுத்தத்துடன் இருக்கும் சூழல் ஏற்படும் என்றாலும் இது தற்காலிகமானதாகவே அமையும். வியாபாரப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் அதிக பொறுப்புகள் ஏற்படும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் படிகம்
மிதுனம்:
இன்றைக்கு ஓய்வு நிறைந்த நாளாக அமையக்கூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். மோசமாக சூழல் உருவாகினாலும், சில சமயங்களில் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் நாளாக அமையும். நிதித்துறையில் இருப்பவர்களுக்கு சவாலான நேரம் இது. பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வானவில் படிகம்
கடகம்:
இன்று தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நாளாக அமையும். வியாபாராத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களது சொந்த நிபுணத்துறையில் நீங்கள் புகழ் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை குறையும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நிலவுக்கல்
சிம்மம்:
இன்றைக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும் நாளாக அமையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். சிறிய மோதல் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே காலம் தாழ்த்தாமல் முடிந்தவரை பிரச்சனையை முடிக்க முயற்சிக்கவும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவிற்கு நல்ல லாபம் பெறமுடியும். சில்லறை வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நெல்லிக்காய்
கன்னி:
இன்றைக்கு துணிவு நிறைந்த நாளாக அமையக்கூடும். புதிய பொருள்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த இடங்கள் மூலம் வணிக வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையில் அல்லது வீட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் சண்டையிடும் சூழல்நிலை உருவாகும். எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும் நாளாக அமையும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பணப்பெட்டி
துலாம்:
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து சென்றால் நல்ல காரியங்கள் நிறைவேறும். விமானப் போக்குவரத்து அல்லது அரசு சேவைத்துறையில் இருந்தால் புதிய வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். பிரபலமான இடத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி
விருச்சிகம்:
இன்றைக்கு வாழ்க்கையில் பல முயற்சிகளை நீங்கள் செய்ய வேண்டிய நாளாக அமையும். கணவன், மனைவிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பல நாள்கள் காணாமல் போன சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கக்கூடும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். வர்த்தம் தொடர்பான நீங்கள் எடுக்கும் புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் : ஒரு பெரிய பூங்கா
தனுசு:
இன்றைக்கு மன நிம்மதியுடன் நீங்கள் இருக்கும் நாளாக அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பிரச்சனைகள் அனைத்தும் சீரானதாகத் தெரியும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நிலுவையில் உள்ள பணி மற்றும் நீண்ட காலமாக செய்ய மறந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீட்டுப்பொறுப்புகள் அதிகமாகும். எதையும் நிதானமாக கையாண்டால் வெற்றியைப் பெறுவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சாமந்தி மலர்
மகரம் :
இன்றைக்கு தனம் நிறைந்த நாளாக அமையக்கூடும். உங்களது உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சோர்வு குறையக்கூடும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் இருக்கும் ஜீனியர் ஒருவர் உங்களிடம் பிரச்சனைகளைக் கூறினால் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நீங்கள் கூறும் நாளாக அமையும். வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், விரைவாக பணம் சம்பாதிக்கும் சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும் நாளாக இன்று அமையக்கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் விளக்கு
கும்பம்:
இன்றைக்கு பக்தி நிறைந்த நாளாக அமையக்கூடும். உத்தியோக பணிகளில் வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். தொலைத்தூர உறவுகளில் சிக்கல் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். வழக்கத்தை விட பணியின் போது மன அழுத்தம் அதிகமாக இருக்கக்கூடும். மன நிம்மதிக்கு உங்களுக்குப் பிடித்தமான இசையைக் கேட்கவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரெட்ரோ இசை
மீனம்:
புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்பார்த்த முடிவு உங்களுக்குக் கிடைக்கும். ஒரு குழுவாக நீங்கள் ஏதேனும் திட்டமிடுகிறீர்கள் என்றால், வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட நாள்களாக தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிதிநிலையில் எவ்வித கஷ்டமும் ஏற்படாது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி கதவு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News