ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 18, 2022) உங்களை தேடி வரும் புதிய வாய்ப்புகளை இறுக பற்றி கொள்ளுங்கள்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (நவம்பர் 18, 2022) உங்களை தேடி வரும் புதிய வாய்ப்புகளை இறுக பற்றி கொள்ளுங்கள்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இதுநாள் வரை பொருளாதார ரீதியாக நீங்கள் சந்தித்த சிரமங்கள் மற்றும் கவலைகள் இன்று மறைந்து விடும். ஏனென்றால் புதிய வருவாய் வாய்ப்புகள் உங்களிடம் வந்து சேர கூடும். உங்களது செயல்பாட்டில் இருக்கும் குறைகளை கண்டறிந்து சரி செய்து கொள்ளுங்கள். குறுகிய தூர பயணத்தால் அனுகூலம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செதுக்கப்பட்ட மரம்

ரிஷபம்:

இன்று உங்களது மனநிலை ஏற்ற, இறக்கங்களை சந்திக்கும். காலை எரிச்சலுடன் துவங்கும் நாள் பிற்பகலுக்கு பின் சீராக செல்லும். திடீரென மேற்கொள்ளும் பயணம் உங்களை உற்சாகமாக வைக்கும். அன்னதானம் செய்ய ஏற்ற நாள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சோலார் பேனல்

மிதுனம்:

முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் துரிதமாக அதே சமயம் விவேகமாக செயல்படுவது உங்களது நாளை சிறப்பானதாக மாற்றும். இன்று உங்களது பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும். உங்கள் பார்ட்னர் பழைய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரெட் கலர் ரிப்பன்

கடகம்:

உங்களது அன்புக்குரியவர் உங்களை புறக்கணிப்பது போல உணர்ந்தால் சற்றும் தாமதிக்காமல் அவரை அணுகி மனம்விட்டு பேசி சிக்கலை சரி செய்ய பாருங்கள். இன்று உங்களுக்கு திடீர் பணவரவு இருக்கலாம். பணப்புழக்கம் உங்கள் நாளை உற்சாகமாக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டம்ளர்

சிம்மம்:

உங்களுக்கு இன்று பல புதிய பிசினஸ் ஐடியாக்கள் தோன்றலாம். அவை எல்லாவற்றையும் உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்நலனில் இன்று அக்கறை செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கலர் கிளாஸ் பாட்டில்

கன்னி:

வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு வந்து சேரும் தகவல் உங்களை மிகவும் மகிழ்ச்சியாக்கும். நீங்கள் ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ள விஷயங்களை செய்ய இன்று ஏற்ற நாள். நிலுவையில் உள்ள விஷயங்களை முடிப்பீர்கள், நீதிமன்ற சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் சஃபையர்

துலாம்:

உங்களுக்கு ஆர்வமாக இருக்கும் விஷயங்களில் ஈடுபட இன்று தயக்கம் காட்டாதீர்கள். உங்கள் மனநிலை இன்று கலவையான உணர்ச்சிகளை கொண்டிருக்கும். உங்களது மைன்ட்செட்டை பொருட்படுத்தாமல் தினசரி வேலைகளில் முழுக்கவனம் செலுத்துங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சந்தன பவுடர்

விருச்சிகம்:

வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு இன்று நல்ல செய்திகள் வந்து சேரும். பணியிடத்தில் ஏற்படும் சில முக்கிய மாற்றங்களுக்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தவர்களே இன்று உங்களுக்கு எதிராக செயல்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காப்பர் காயின்

தனுசு:

நீங்கள் முன்பு செய்த முதலீடு தற்போது உங்களுக்கு கணிசமான வருமானத்தை அளிக்கலாம். இன்று அல்லது விரைவில் நீங்கள் ஒரு பெரிய செலவை சந்திக்க கூடும், அதற்காக நீங்கள் தயாராக இருக்க வேண்டும். வயதில் மூத்தவர்கள் கேட்கும் உதவிகளை தயங்காமல் செய்து கொடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோலா கேன்

மகரம்:

இன்று உங்களது சகோதர, சகோதரிகளுடனான உறவில் விரிசல்களை சந்திக்க நேரிடலாம் என்பதால் அவர்களுடன் பேசும் பொது கவனம் தேவை. இன்று உங்களை தேடி வரும் புதிய வாய்ப்புகளை இறுக பற்றி கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

கும்பம்:

இன்று அவசியம் அல்லது அவசரம் இன்றி ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். பணியிடத்தில் சீனியர் உங்கள் வேலையில் திருப்தியடையாமல் இருக்கலாம். உங்களது கடந்த கால ரகசியம் இன்று வெளிவர வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்கல்

மீனம்:

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கடமையை இன்று தாமதிக்காமல் நிறைவேற்ற பாருங்கள். இல்லை என்றால் உங்களுக்கு அந்த கடமையை யாராவது நினைவுபடுத்தி கொண்டே இருப்பார்கள். உங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படும். உங்களது பழைய நண்பரை பற்றி இன்று புரிந்து கொள்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூங்கொத்து

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks, Tamil News