முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 14, 2022) வேலையிடத்தில் பாராட்டுகள் கிடைக்கலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 14, 2022) வேலையிடத்தில் பாராட்டுகள் கிடைக்கலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம் :

இன்று உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். வேலையில் உங்களை பற்றி யாராவது கருத்து சொன்னாலோ அல்லது உங்களை குறைகூறினாலோ அதனை புறக்கணிக்கவும். மனஅழுத்தத்தை குறைக்க வெளியே சென்று வாருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு நிறம்

ரிஷபம் :

இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் பயண திட்டங்கள் இருந்தால் அதற்காக சேமிக்கவும். இன்று ஒரு விஷயத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு மேம்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் பை

மிதுனம் :

முக்கிய வேலைகள் இருந்தால் இன்றைய நாளைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். உறவினருக்கு சில பண உதவி தேவைப்படலாம் என்பதால் உங்களை தேடி வருவார். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு நெருக்கமான ஒருவரை சந்திப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரகதம்

கடகம் :

இன்று குடும்பத்தினருடன் ஷாப்பிங் சென்று வருவீர்கள். முன்கூட்டியே உறுதியளித்திருந்த பணிகளை இன்று முடிக்க முயற்சிப்பீர்கள். எனினும் வழக்கமான வேலைகளில் தடைகள் உருவாகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கார்னிலியன்

சிங்கம் :

அலுவலகத்தில் குழுப்பணி இன்று உங்களுக்கு உதவும். புதிதாக ஒருவருடன் பணியாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். வேலையில் சூடான வாக்குவாதம் உங்கள் நாளை பாதிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பைரைட் கிரிஸ்டல்

கன்னி :

குறுகிய கால திட்டமிடல் தற்போதைய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வேலையில் சிக்கல் ஏற்பட்டால் பொறுமையாக கையாளுங்கள். மேலும் இன்று விருந்தினர்களை வரவேற்க தயாராக இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா

துலாம் :

வீட்டில் உள்ள உறுப்பினர்களுடன் நேரம் செலவிட இன்று நல்ல நாள். வேலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு மதிப்பாய்வு செய்யப்படும். ஒரு நல்ல பயிற்சி உங்களுக்கு தேவையான ஆற்றலை திரும்ப பெற உதவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் அம்பர் கல்

விருச்சிகம் :

அலுவலகத்தில் இன்று ஆர்வத்துடன் பணியாற்றுவார்கள். ஆற்றல் நிறைந்த நாளாக காணப்படுகிறது. நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சமீபத்தில் இழந்ததை இன்று திரும்ப பெறுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான குவார்ட்ஸ்

தனுசு :

தொலைதூரத்தில் அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு நல்ல செய்தியை கொடுக்கும். நீங்கள் இன்று சிறப்பாக உணர்வீர்கள். ஒரு குறுகிய திட்டம் வேலை செய்யக்கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கை திருப்தியாக இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நிலவு

மகரம் :

சில புதிய சுகாதார நடைமுறைகளைத் தொடங்க இன்று ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று இன்று கிடைக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

கும்பம் :

வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றுவதற்கான அறிகுறியை இன்று தெரிந்து கொள்வீர்கள். உங்கள் உள்ளுணர்வைப் பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை கண்காணிக்கவும். இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது என்பதால் நிதானமாக செயல்படுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா

மீனம் :

வெளிநாட்டவரின் ஒரு நல்ல ஆலோசனையானது உங்கள் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தும். நீங்கள் நம்பிக்கையுடனும், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதிலும் உறுதியாக இருப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News