Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (ஜூலை 17) பணமும் புகழும் தேடி வரும்

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (ஜூலை 17) பணமும் புகழும் தேடி வரும்

எண் கணித பலன் 17 ஜூலை 2022

எண் கணித பலன் 17 ஜூலை 2022

ஜூலை 17 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வணிகம் அல்லது வேலை சார்ந்து அனைத்து வித நேர்மறையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தினம் இது. பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க இருக்கிறது. வாழ்க்கையில் புதியதொரு மாற்றம் நிகழ இருக்கிறது. அது பதவி, முதலீடு, புதிய வேலை, வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - டீல்
    அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 5
    தானம் - ஏழைகளுக்கு மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்ய வேண்டும்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    சோம்பல் முறித்து, சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே பலன்களை பெற முடியும். உங்கள் அப்பாவித்தனத்தை சிலர் தவறாக பயன்படுத்த முயற்சிக்கலாம் என்பதால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றோருக்கு வெற்றி வாய்ப்பு உண்டு.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்
    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 2
    தானம் - கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்கவும்.

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    கல்வியில் புதிய படிப்புகளுக்காக கட்டணம் செலுத்த சிறப்பு வாய்ந்த நாள் இதுவாகும். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. ஐடி பணியாளர்கள் திறனை வளர்த்துக் கொண்டு புதிய வேலை தேட வேண்டும். விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு வெற்றி மற்றும் பணப் பரிசு ஆகியவை கிடைக்கும். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்ய சரியான தருணம் ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் ப்ளூ
    அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 5
    தானம் - ஏழைகளுக்கு வாழைப்பழம் தானமாக கொடுக்கவும்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்காக முதலீடு செய்து குறித்து திட்டமிட வேண்டிய நாள் இதுவாகும். அதிகாரம் மற்றும் பணம் ஆகிய இரண்டும் சேர்ந்து உங்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும். மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம். விளையாட்டு வீரர்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் குறைகளை கவனமாக கேட்கவும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்
    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9
    தானம் - பிச்சைக்காரர்களுக்கு உணவளியுங்கள்

    #எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    பணியில் நீண்ட காலடி எடுத்து வைப்பதற்கான நேரம் இது. ஆகவே நேர்காணல்களுக்கு செல்லலாம். உங்கள் எண்ணங்களை பார்ட்னரிடம் வெளிப்படுத்துவதற்கு சிறப்பான நாள் ஆகும். இயந்திரங்கள் வாங்கலாம், சொத்துக்களை விற்பனை செய்யலாம் மற்றும் அலுவல் ரீதியிலான ஆவணங்களில் கையெழுத்திடலாம். கவனக்குறைவாக இருக்க கூடாது.

    அதிர்ஷ்ட நிறம் - டீல்
    அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 5
    தானம் - குழந்தைகளுக்கு பச்சை நிற பழங்களை தானமாக வழங்கவும்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
    உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் இலக்குகள் இன்றைக்கு நிறைவேறும். உங்கள் முயற்சிகளுக்கு இன்று நேரம் ஒத்துழைப்பு தரும். ஆகவே இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் அன்பு மற்றும் ஆதரவு ஆகியவை மகிழ்ச்சியை தரும்.

    அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 9
    தானம் - ஏழைகளுக்கு அரிசி தானம் செய்யவும்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    ஆன்மீகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். உறவுகளை கொண்டாடுவதற்கான நேரம் இது. வாழ்க்கை பயணத்தில் நிதி சார்ந்த பலன்கள் கிடைக்க இருக்கின்றன. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள். விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரின் செயல்பாடுகளுக்கு பாராட்டு கிடைக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - பச்சை
    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 3
    தானம் - வெண்கலம் அல்லது காப்பர் பாத்திரம் தானம் செய்யவும்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் பணி சார்ந்த ஏற்றம் கிடைக்க இருக்கிறது. உங்கள் சக்தி, பணம், அதிகாரம், பிராண்ட் வேல்யூ போன்ற அனைத்தையும் பயன்படுத்தி உங்கள் கனவுகளை நனவாக்கவும். உங்களை சுற்றியுள்ள நபர்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த உள்ள நிலையில் தலைமைத்துவத்தை ஏற்று மகிழலாம். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும்.

    அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்
    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 6
    தானம் - ஏழைகளுக்கு உடை மற்றும் உணவு தானம் செய்யவும்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    சோசியல் நெட்வொர்க்கிங் மற்றும் எதிர் பாலினத்தவர் மூலமாக உங்களுக்கு பணமும், புகழும் கிடைக்க இருக்கிறது. மருத்துவர்கல், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க இருக்கிறது. இன்று திருமணம் நிச்சயிக்கப்பட வாய்ப்பு உண்டு. உறவுகள் பலப்படும். அதிர்ஷடம் கை கூடும்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
    அதிர்ஷ்ட எண் - 9
    தானம் - சிவப்பு நிற கர்சிஃப் தானமாக வழங்கவும்

    ஜூலை 17 அன்று பிறந்த பிரபலங்கள் : சுனில் லாம்பா, ரவி கிஷன், ஜரினா வஹாப், கிரண் ஜுனேஜா, சம்யுக்தா ஹெக்டே
    Published by:Murugesh M
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி