Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஜூலை 2022) கோதுமையை தானம் செய்யுங்கள்

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (16 ஜூலை 2022) கோதுமையை தானம் செய்யுங்கள்

எண் கணித பலன் - 16 ஜூலை 2022!

எண் கணித பலன் - 16 ஜூலை 2022!

Numerology | ஜூலை 15-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் நம்பிக்கைக்குரியவரிடம் உங்கள் எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவீர்கள். போட்டிகளில் பங்கேற்க, அரசாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட, நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்ய நல்ல நாள். சட்டம் அல்லது உத்தியோகபூர்வ சிக்கல்களை தீர்க்க நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு உங்கள் ஆதரவு மற்றும் உதவியை வழங்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம் - பீஜ்

    அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

    அதிர்ஷ்ட எண் - 7

    தானம் - ஆசிரமங்களில் கோதுமையை தானம் செய்யுங்கள்

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் உதவி மனப்பான்மையே உங்களுக்கு சிக்கலை உருவாக்கலாம் என்பதால் இன்று கவனம் தேவை. தனிப்பட்ட பிரச்சனைகளை புறக்கணித்து, வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வாழ்க்கைப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் உங்கள் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ மற்றும் கிரீம்

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

    தானம் - கோவிலில் அல்லது ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யுங்கள்

    #எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    நீங்கள் விரும்பும் துறையில் வெற்றி பெறுவீர்கள், உங்கள் இருப்பு இன்று வசீகரமாக இருக்கும். நாடக கலைஞர்கள் பணியிடத்தில் சிறப்பாக செயல்படவேண்டும். பொது பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், மாணவர்கள், செய்தி தொகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கலைஞர்கள், இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் வரலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

    அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

    தானம் - ஆசிரமங்களில் உள்ள குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை வழங்குங்கள்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    கடந்த காலத்தை மறந்து விட்டு நிகழ்காலத்தை பற்றி மட்டுமே யோசியுங்கள் இருங்கள். பணிசுமைகள் சற்று கூடுதலாக இருக்கும். பச்சை மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டுமானம், இயந்திரங்கள், உலோகங்கள், மென்பொருள் மற்றும் தரகர்கள் போன்ற வணிகங்களை செய்வோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9

    தானம் - ஏழைகளுக்கு எண்ணெய் தானம் செய்யுங்கள்

    #எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் இல்லையெனில் உங்கள் நண்பரைக் காயப்படுத்துவீர்கள். இன்று கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள். சொத்து அல்லது பங்கு முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நாள். விளையாட்டு வீரர்கள் தங்களது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பச்சை நிறத்தை அணியலாம்.

    அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

    அதிர்ஷ்டமான நாள் - புதன்

    அதிர்ஷ்ட எண் - 5

    தானம் - ஏழைகளுக்கு வெள்ளை மாவு தானம் செய்யுங்கள்

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களுக்கு வணிகம் மற்றும் வேலை வளர்ச்சி நன்றாக இருந்தாலும் உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். எனவே வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க நினைவில் கொள்ளுங்கள். இன்று அதிக பொறுப்புகளை எடுத்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹோட்டல் வியாபாரிகள், நகைக்கடைக்காரர்கள், நடிகர்கள், ஜாக்கிகள் மற்றும் மருத்துவர்களுக்கு சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - கால்நடைகள் அல்லது குழந்தைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று ஆவணங்களை கையாளுவதில் கவனம் தேவை. ஆடை, திரையரங்கம், தொழில்நுட்பம், அரசு டெண்டர்கள், ரியல் எஸ்டேட், பள்ளிகள், உள்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு இன்று சிறந்த நாள். காதல் உறவில் பரஸ்பர நம்பிக்கையை பேண வேண்டும். உங்கள் தலைமைத்துவமும் பகுப்பாய்வுத் திறனும் தான் உங்கள் ஆளுமையின் சொத்துக்கள் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் நாள் சிறப்பாக செல்லும்.

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

    அதிர்ஷ்ட எண் - 7

    தானம் - ஏழைகளுக்கு வேர்க்கடலை தானம் செய்யுங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    மற்றவர்களின் விஷயங்களில் இன்று அதிகம் தலையிடாதீர்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய நேரம். வணிகத்தில் பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது இன்று அவசியம். ஆனால் இன்று லாங் டிரைவ்களை தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம்

    அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் - 6

    தானம் - ஏழைகளுக்கு பாதணிகளை தானம் செய்யுங்கள்

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    ஊடகம், விளையாட்டு, கட்டுமானம், மருத்துவம், அரசியல் மற்றும் கவர்ச்சி துறையை சேர்ந்தவர்கள் இன்று புதிய உயரங்களைக் காண்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குபவர்களுக்கு சாதனைகள் மற்றும் பண வரவுகள் நிறைந்த நாள். வணிகம் அல்லது வேலையை மேம்படுத்தவும், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடவும் இன்று ஒரு நல்ல நாள்.

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

    அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

    தானம் - தெரிந்த பெண்களுக்கு சிவப்பு நிற புடவையை வழங்குங்கள்

    ஜூலை 16-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஆம்னா ஷெரீப், தன்ராஜ் பிள்ளை, பவன் குமார் பன்சால், பாரிஸ் லட்சுமி, அருணா ஆசப் அலி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி