ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன் (ஏப்ரல் 23): இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இன்று திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி காணப்படும்

எண் கணித பலன் (ஏப்ரல் 23): இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இன்று திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி காணப்படும்

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

ஏப்ரல் 23 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் இதோ

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் பணியின் மீது உங்கள் பெயரையும், புகழையும் நிலைநாட்ட முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். இதனால், உயர் பொறுப்புகளில் இருப்பீர்கள். உங்களின் செயலால் உங்கள் வாழ்க்கைத் துணை மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு, உங்கள் மீது அர்ப்பணிப்போடு இருப்பார். அன்புக்குரியவர்களிடம் இருந்து ஆதரவு அல்லது அங்கீகாரம் போன்றவற்றை பெறுவதற்கான அழகிய நாள் இதுவாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் - கோவிலில் மஞ்சள் நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் தேவைகள் மற்றும் கனவுகள் என அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வதற்கான நாள் இது. பெண்கள், உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தினால் அலுவலகத்தில் அல்லது வீட்டில் எல்லோரது மனங்களையும் வெல்ல முடியும். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த திறமையைக் கண்டு பெற்றோர் பெருமை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு உப்பு வழங்கவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

சரியான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு கிடைக்க இருக்கிறது. நீங்கள் முறையாக தொடர்பு கொள்ளவில்லை என்றால் உறவுகளுக்குள் கசப்புகள் வரலாம். ஆகவே அமைதியாக இருக்காதீர்கள். கலைஞர்கள் போன்ற கற்பனை திறன் சார்ந்த தொழில் செய்பவர்கள் முதலீடு செய்யவும், லாபம் அடையவும் உகந்த நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆசிரமங்களில் ஆரஞ்சு பழங்களை தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மிகச் சிறந்த நாளாகும். மார்க்கெட்டிங் சார்ந்த உத்திகளை தொடர்ந்து செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். இன்றையநாள் மிகுந்த விறுவிறுப்பு உடையதாக காணப்பட்டாலும், மாலையில் அதற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். இளம் வயதினர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தலாம். நட்பு மற்றும் உறவுகளை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். அசைவம் அல்லது மதுவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு புளிப்பு சுவை கொண்ட பழங்களை தானம் செய்யவும்.

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

வேலை அல்லது தொழில் சார்ந்து திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வளர்ச்சி காணப்படும். உறவுகளை கொண்டாடுவதற்கான நாள் ஆகும். ஷாப்பிங் செய்ய, சவால்களை எதிர்கொள்ள, பங்குகளை வாங்க, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிறந்த நாள் ஆகும். இன்று சிறு தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - தாவரங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

சொத்து வளம் மற்றும் சொகுசு ஆகியவை வாழ்வில் மேம்பட இருக்கிறது. பொறுப்புகள் ஏராளம் உண்டு என்றாலும், மன மகிழ்ச்சியோடு அவற்றை ஏற்கலாம். இன்று அனைத்து இலக்குகளும் நிறைவேறும். நீங்கள் ஒரு சாம்பியன் என்ற அடையாளத்தை உருவாக்குவீர்கள். இல்லத்தரசிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையும், அன்பும் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2

தானம் - குழந்தைகளுக்கு பேனா, பென்சில் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

மூத்தவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வணிகம் சார்ந்த அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இன்றைய நாளில் நம்பிக்கை என்பதை காண இயலாது. எனவே, அலுவலகத்தில் உங்கள் உணர்வுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மூத்தவர்களின் ஆசிர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும். வீட்டில் இருந்து பணி செய்யும் வழக்கறிஞர்கள், சாஃப்ட்வேர் பணியாளர்கள் இடம்பெயர நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - காப்பர் பாத்திரம் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விவாதிக்கும் போது அமைதி காக்கவும். இல்லாவிட்டால் உங்கள் எதிர்காலத்திற்கு சிக்கல் ஏற்படலாம். கடந்த காலங்களில் நீங்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பு ஆகியவை இன்றைய சவால்களை முறியடிக்க உதவும். தம்பதியர்களுக்கு இடையேயான காதல் உணர்வு மேம்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவர்கள், பொறியாளர்கள், பில்டர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் போன்றோருக்கு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களில் கடுகு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 9 ( நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நடிகர்கள், பாடகர்கள், டிசைனர்கள், அரசியல் தலைவர்கள் அல்லது மருத்துவர்கள், எழுத்தாளர்கள், மீடியா பணியாளர்கள் போன்ற பெரும் திரள் மக்களை மையமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு பெயர், புகழ், வளம் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில் கிடைக்க இருக்கின்றன. பங்குச் சந்தைகள் மற்றும் நிலங்களில் முதலீடு செய்வதற்கு சரியான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கைக்குட்டையை தானமாக வழங்கவும்.

ஏப்ரல் 23 அன்று பிறந்த பிரபலங்கள் : மனோஜ் பாஜ்பாயி, தேவ் பட்டேல், ஜான் சேனா, கிக்கு ஷர்தா,

Published by:Yuvaraj V
First published:

Tags: Numerology