பொதுவாகவே ஒவ்வொரு எண்ணில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு வகையான குணாதிசயங்கள் இருக்கும். இதற்கு காரணம் ஒவ்வொரு எண்களுமே அதற்குரிய கிரகத்தின் பலமும் பலவீனமும் கொண்டிருப்பது தான். எங்களில் 6 என்பது சுக்கிரனின் எண் ஆகும். ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் அனைவருமே சுக்கிரன் ஆதிக்கத்துடன் பிறந்தவர்கள் தான். எப்படி ஒரு நபர் ஒரு ராசியில் பிறக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட ராசிகள் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள் என்று வேத ஜோதிட அடிப்படையில் கூறப்படுகிறதோ அதேபோல என் கணித ஜோதிட அடிபப்டையில் குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களுக்கும் அந்த கிரகத்தின் ஆளுமை மற்றும் பலவீனங்கள் இருக்கும்.
6ம் எண் சுக்கிரன் பகவானுக்குரிய எண்ணாகும். 6 ஆம் தேதி என்பது, 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களைக் குறிக்கும். சுக்கிரனுக்கு உரிய கிழமை வெள்ளிகிழமை, இதனால் சுக்கிரனை வெள்ளி என்றும் அழைப்பார்கள்.
6 ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்:
6ம் எண்ணில் பிறந்தவர்கள் நேர்மையை குறிக்கோளாக கொண்டவர்கள். காதல் பாசமும் உறவும் அவர்களின் வாழ்க்கையில் முதன்மையானது. இவர்களது வாழ்க்கையில் எதிர் பாலினத்தவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இசை, கலை, இலக்கியம், நாடக போன்ற கலை நோக்கங்களை உள்ளடக்கிய தொழிலையும், அழகு பொருட்கள் சம்பந்தமான தொழிலையும் நடத்தி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். சூழ்நிலை அல்லது உறவினர்களின் சதியால் வாழ்க்கையில் நல்ல தொடக்கம் கிடைக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அனைத்து தடைகளும் விலகி வெற்றியை எட்டித்தொட வாய்ப்பு கிடைக்கும்.
சொத்து, லாட்டரி போன்றவற்றில் இருந்து எதிர்பாராத பணத்தைப் பெற சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது செய்யும் தொழிலில் புகழோடு சேர்த்து, வருமானமும் அதிகரிக்கும். அவரது தோற்றம் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக மக்கள் மத்தியில் அதிகம் மதிக்கப்படுவார்கள். இன்டீரியர் டிசைனர், ஆடை வடிவமைப்பு, அழகு சாதனப் பொருட்கள், ஓவியம், இசை, நடிப்பு, கிரிக்கெட், ஹோட்டல், பத்திரிகை, பயணம் ஆகிய துறைகளில் பணிபுரிபவர்களுக்கு புகழ் பெருகும்.
பிறருக்கு அடிமை வேலை பார்ப்பது இவர்களுக்கு சிறிதும் பிடிக்காது. புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதால் எதிர் பாலினத்தவரிடம் தனித்துவமான ஈர்ப்பை பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 2
தானம்: வெள்ளி நாணயத்தை தானமாக கொடுப்பது நல்லது.
2. தோல் வாரால் ஆன கடிகாரத்திற்கு பதிலாக வெள்ளி உலோகக் கடிகாரத்தை அணியுங்கள்
3. எப்போதும் வெளிர் நிற துணிகளை அணியுங்கள்
4. அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் லட்சுமி ஜபம் செய்ய வேண்டும்.
5. அசைவம் மற்றும் மதுவை கட்டாயம் தவிர்க்கவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Rasi Palan