கிரகநிலை:(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
ராசியில் புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹு, சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றம்:
மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.
மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
எந்த கடினமான சூழ்நிலையையும் தனது சாதுர்யமான பேச்சால் சமாளிக்கும் ரிஷப ராசியினரே இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அரசியலில் உள்ளவர்கள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: மே 02, 03, 04, 30, 31
உங்கள் ராசிக்கான பலன்களை, மேற்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.