Home /News /spiritual /

மிதுனம் ராசி மே மாத பலன்கள்: கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது

மிதுனம் ராசி மே மாத பலன்கள்: கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது

மிதுனம் ராசி

மிதுனம் ராசி

Monthly Rasi Palan | மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

    கிரகநிலை:(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராஹு, சூர்யன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றம்:

    மே 04 - அன்று புத பகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
    மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
    மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.
    மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    தனது நிதானமான போக்கினால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வித்தை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

    குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

    தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

    கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

    மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

    உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

    பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: மே 21, 22
    அதிர்ஷ்ட தினங்கள்: மே 05, 06

    உங்கள் ராசிக்கான பலன்களை, மேற்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Mithunam, Rasi Palan

    அடுத்த செய்தி