கிரகநிலை: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
ராசியில் ராஹூ, சூர்யன், சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றம்:
மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.
மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்:
எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. ஆனாலும் குருவால் மனம் அமைதி பெறும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: மே 01, 27, 28, 29
உங்கள் ராசிக்கான பலன்களை, மேற்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.