Home /News /spiritual /

கன்னி ராசி மே மாத பலன்கள்: உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் சேரும்.

கன்னி ராசி மே மாத பலன்கள்: உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் சேரும்.

கன்னி ராசி

கன்னி ராசி

Monthly Rasi Palan | மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

    கிரகநிலை:(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு, சூர்யன், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றம்:

    மே 04 - அன்று புத பகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
    மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
    மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார்.
    மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்கள் நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

    குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

    பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

    கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.

    பரிகாரம்:  ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

    சந்திராஷ்டம தினங்கள்: மே 01, 27, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: மே 12, 13

    உங்கள் ராசிக்கான பலன்களை, மேற்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kanni, Rasi Palan

    அடுத்த செய்தி