கிரகநிலை:(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
ராசியில் புதன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் செவ், சுக் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
26-02-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-02-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
01-03-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
வியாபாரத்தில் புதுமையை விரும்பும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: பிப் 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 09, 10
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Rasi Palan