முகப்பு /செய்தி /ஆன்மிகம் / விருச்சிக ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.!

விருச்சிக ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.!

விருச்சிகம்

விருச்சிகம்

Margazhi Monthly Rasi Palan | மார்கழி மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

 தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ)  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

வாதத்திறமை கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த  மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து  முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல்  ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய  விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.  வாகனத்தை  ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து  வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த  கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள்  நீங்கும்.

மார்கழி மாத பலன்கள்...

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

First published:

Tags: Astrology, Margazhi, Rasi Palan, Tamil News