முகப்பு /செய்தி /ஆன்மிகம் / துலாம் ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : தொழில் செழிக்கும்.. பொருளாதாரம் உயரும்.!

துலாம் ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : தொழில் செழிக்கும்.. பொருளாதாரம் உயரும்.!

துலாம்

துலாம்

Margazhi Monthly Rasi Palan | மார்கழி மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் கேது  - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ)  - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை இருக்கிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக பாடுபடும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை  செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல்  இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம்.  கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின்  நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

தொழிலில் புதிய ஆர்டர் விஷயமாக  வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள்  தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது  நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை  திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்

பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான  பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும்

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். ஆசிரியர் சொல்படி கேட்டு நடப்பது நன்மையைத் தரும். சக மாணவர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.

அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.

மார்கழி மாத பலன்கள்...

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்,

First published:

Tags: Astrology, Margazhi, Rasi Palan, Tamil News