ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மீனம் ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும்.!

மீனம் ராசிக்கான மார்கழி மாத பலன்கள் : திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும்.!

மீனம்

மீனம்

Margazhi Monthly Rasi Palan | மார்கழி மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

அடுத்தவருக்கு உதவிகளை தயங்காமல் செய்யும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக்  கூட  கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும்  நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது  படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை. வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.  தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக முக்கியஸ்தர் ஒருவரது உதவி கிடைக்கும்.  முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம்  காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம்  எந்த விஷயத்தையும் சொல்லும் போது  கவனம் தேவை. 

மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது  வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல் துறையினருக்கு விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

பரிகாரம்: குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

மார்கழி மாத பலன்கள்...

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,

First published:

Tags: Astrology, Margazhi, Rasi Palan, Tamil News