ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சனி, செவ், சுக் - சுக ஸ்தானத்தில் குரு, சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
01-03-2022 அன்று புதன் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2022 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று ராஹூ பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று கேது பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-03-2022 அன்று சுக்ர பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
அமைதியாக இருக்கும் அதேநேரத்தில் எதிர்ப்புகள் வந்தால் எரிமலையாகிவிடும் விருச்சிகராசியினரே இந்த மாதம் எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளை களிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.
கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.
விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.
அனுஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
கேட்டை:
இந்த மாதம் உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.