ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கார்த்திகை மாத பலன்கள்: விருச்சிக ராசி - எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.!

கார்த்திகை மாத பலன்கள்: விருச்சிக ராசி - எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.!

விருச்சிகம் ராசி

விருச்சிகம் ராசி

karthigai Monthly Rasi Palan | மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

    கிரகநிலை:

    ராசியில் சூர்யன், புதன், சுக்கிரன்  - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ)  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் கேது  என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    28-11-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  B2

    29-11-2022 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-12-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    சீரான வாழ்க்கை முறைகளை வாழவிரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

    தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

    குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.

    கலைத்துறையினருக்கு பண வரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவருடனுடம் அனுசரித்து செல்வது நல்லது.

    அரசியல்துறையினருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். 

    மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

    கார்த்திகை மாத பலன்கள்

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மேஷ ராசி - வியாபாரதில் நல்ல லாபம் கிடைக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: ரிஷப ராசி - எதிர்பார்த்த பணம் வந்து சேரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மிதுன ராசி - மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கடக ராசி - குழந்தைகளால் பெருமை சேரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: சிம்ம ராசி - வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கன்னி ராசி - காரிய வெற்றி உண்டாகும்.!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: துலாம் ராசி - மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: தனுசு ராசி - கடன் பிரச்சனைகள் தீரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மகர ராசி - தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கும்ப ராசி - பணவரத்து திருப்திகரமாக இருக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மீன ராசி - வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்..!

    Published by:Selvi M
    First published:

    Tags: Astrology, Rasi Palan, Tamil News