ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கார்த்திகை மாத பலன்கள்: சிம்ம ராசி - வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்..!

கார்த்திகை மாத பலன்கள்: சிம்ம ராசி - வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்..!

சிம்ம ராசி

சிம்ம ராசி

karthigai Monthly Rasi Palan | மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது  - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    28-11-2022அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    29-11-2022 அன்று செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-12-2022 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    முடிவெடுப்பதில் வல்லவர்களான சிம்ம ராசி அன்பர்களே,  இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.

    தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். 

    உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம்  தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.

    பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். 

    அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரவு அதிகப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். 

    மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

    கார்த்திகை மாத பலன்கள்

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மேஷ ராசி - வியாபாரதில் நல்ல லாபம் கிடைக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: ரிஷப ராசி - எதிர்பார்த்த பணம் வந்து சேரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மிதுன ராசி - மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கடக ராசி - குழந்தைகளால் பெருமை சேரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கன்னி ராசி - காரிய வெற்றி உண்டாகும்.!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: துலாம் ராசி - மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: விருச்சிக ராசி - எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: தனுசு ராசி - கடன் பிரச்சனைகள் தீரும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மகர ராசி - தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: கும்ப ராசி - பணவரத்து திருப்திகரமாக இருக்கும்..!

    Also Read : கார்த்திகை மாத பலன்கள்: மீன ராசி - வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்..!

    Published by:Selvi M
    First published:

    Tags: Astrology, Rasi Palan, Tamil News