Home /News /spiritual /

மேஷம் ராசி ஜூன் மாத பலன்கள்: சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்

மேஷம் ராசி ஜூன் மாத பலன்கள்: சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்

மேஷம் ராசி

மேஷம் ராசி

Monthly Rasi Palan | மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

    கிரகநிலை:(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

    ராசியில் புத, ராஹூ, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    எதைப் பறறியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும். எல்லாம் அவன் செயல் என்று எண்ணும் மேஷ ராசியினரே இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுத்து வந்த சுப பலன் உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும்.

    தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

    குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

    பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

    அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்

    அசுபதி:

    இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

    பரணி:

    இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

    கார்த்திகை:

    இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்; தேய்பிறை: செவ்வாய் - வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 13, 14

    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 6, 7

    உங்கள் ராசிக்கான பலன்களை, மேற்காணும் இணைப்பை கிளிக் செய்து அறிந்துக் கொள்ளலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி