தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் உடைய கும்ப ராசியினரே இந்த மாதம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். குருவின் தனஸ்தான பார்வை சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். வேண்டியவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.
குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்
பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.
அரசியல்துறையினர் வீட்டைவிட்டு வெளியில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்தவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.
அவிட்டம்:
இந்த மாதம் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.
சதயம்:
இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.
பூரட்டாதி:
இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள் - புதன் - வெள்ளி; தேய்பிறை: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 1, 2, 3, 28, 29, 30
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.