• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • Rasi Palan : துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

Rasi Palan : துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

துலாம்

துலாம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction June 2021

 • Share this:
  துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

  கிரகநிலை: தனவாக்கு ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில்  சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  குரு(அசா) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

  இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய்       பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.

  இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் துலா ராசியினரே நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர். இந்த மாதம் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக்கிரனால் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும். கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

  செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

  வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

  பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

  கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

  அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.

  மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

  சித்திரை - 3, 4:

  இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.

  ஸ்வாதி:

  இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

  விசாகம் - 1, 2, 3:

  இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

  பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

  அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;

  சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

  அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

  12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

  மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: