• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • Rasi Palan : சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

Rasi Palan : சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

சிம்மம்

சிம்மம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction June 2021

 • Share this:
  சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி(வ) - சப்தம ஸ்தானத்தில்  குரு(அசா) - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

  இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய்       லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.

  இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  கருமமே கண்ணாக இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியைப் பார்க்கும் குருவால் தன்னம்பிக்கை ஏற்படும். அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனை கள் தோன்றும்.

  தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்கு வரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும் இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

  பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.

  கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

  அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

  மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

  மகம்:

  இந்த மாதம் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.

  பூரம்:

  இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

  உத்திரம் - 1:

  இந்த மாதம் ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

  பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.

  அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;

  சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

  அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

  12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

  மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: