முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

Rasi Palan : மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

மகரம்

மகரம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction June 2021

  • Last Updated :

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை : ராசியில் சனி(வ) - தனவாக்கு ஸ்தானத்தில் குரு(அசா) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலை அமைந்திருக்கிறது.

இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய்       ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.

இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே இந்த மாதம் வரவை போலவே செலவும் இருக்கும். திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக் கும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.

மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

உத்திராடம் - 2, 3, 4:

இந்த மாதம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

திருவோணம்:

இந்த மாதம் புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

அவிட்டம் - 1, 2:

இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

First published:

Tags: Rasi Palan