• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

Rasi Palan : கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

கன்னி

கன்னி

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction June 2021

  • Share this:
    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கிரகநிலை: தைரிய வீர்ய ஸ்தானத்தில்  கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில்  சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு(அசா) - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.

    இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய்       தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வகர நிவர்த்தி அடைகிறார்.

    இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வதும் சூர்யன் - ராகு சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

    கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

    பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

    கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.

    மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

    உத்திரம் - 2, 3, 4:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.

    ஹஸ்தம்:

    இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

    சித்திரை - 1, 2:

    இந்த மாதம் வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

    பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

    அதிர்ஷ்ட தினங்கள்: 27, 28

    12 ராசிக்கான ஜூன் மாத பலன்கள்

    மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மிதுனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    துலாம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    விருச்சிகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கன்னி ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மகரம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    கும்பம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூன் 2021

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: