ராசியில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் கச்சிதமாக செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும். செலவு செய்யும் முன் தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது.
தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
பெண்களுக்கு முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பரிகாரம்: வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.