Rasi Palan : சிம்மம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

சிம்மம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction August 2021

  • Share this:
    சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றங்கள்:

    05-08-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

    12-08-2021 அன்று சுக்கிர பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-08-2021 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாறுகிறார்.

    23-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சமூகத்தில் முக்கிய மனிதர்களின் ஆதரவும் அன்பும் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் நடையில் மிடுக்கும் தோரணையும் கொண்டவர். இந்த மாதம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும்  நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது  படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

    தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

    குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை  எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி உற்சாகமான காணப்படுவீர்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர்  வருகையாலும் செலவு உண்டாகும்.

    பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

    அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

    கலைத்துறையினர் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது  நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.

    மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும். மேல்படிப்புக்கு திட்டமிடுவீர்கள்.

    பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.

    அதிர்ஷ்டகிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய்

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
    Published by:Vaijayanthi S
    First published: