முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

Rasi Palan : ரிஷபம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

ரிஷபம்

ரிஷபம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction August 2021

  • Last Updated :

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை: ராசியில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-08-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

12-08-2021 அன்று சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-08-2021 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வெள்ளை மனம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் கொடுத்த வாக்கினை மதிப்பவர்கள். இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து  முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்  இருக்கும். பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது  நல்லது.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

கலைத்துறையினர் திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

top videos

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

    First published:

    Tags: Rasi Palan