மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
நிதானத்தோடு எந்த ஒரு காரியத்தையும் அணுகும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் மதி நுணுக்கமுடையவர்கள். இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் நல்லபடியாக வரும். ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை எடுப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan