• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

Rasi Palan : மீனம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

மீனம்

மீனம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction August 2021

  • Share this:
    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றங்கள்:

    05-08-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    12-08-2021 அன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-08-2021 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    23-08-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    மற்றவர்களின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

    தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய  வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  கடன் வசதி கிடைக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே  திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து  கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

    பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து  திருப்தி தரும்.

    அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

    கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.

    மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.  உற்சாகமாக காணப்படுவீர்கள்.

    பரிகாரம்: நவக்கிரக குருவிற்கு வியாழக்கிழமையில் மூக்கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்  வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

    அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

    அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8, 9

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: