Home /News /spiritual /

Rasi Palan : கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

Rasi Palan : கடகம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

கடகம்

கடகம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction August 2021

    கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றங்கள்:

    05-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    12-08-2021 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-08-2021 அன்று சூரிய பகவான் ராசியிலிருந்து   தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    23-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்: மனசாட்சியோடு செயல்படும் கடக ராசி அன்பர்களே நீங்கள் சந்திரனை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம்  உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.

    தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம்  உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே  உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை  திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

    குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது  வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள்  உங்களது பேச்சுக்கு செவி  சாய்ப்பார்கள். தம்பதிகளுக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

    பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

    அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.

    கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

    மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு  பெறுவீர்கள்.

    பரிகாரம்: திங்கள் கிழமைகளில் அம்மனுக்கு விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

    அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி