Rasi Palan : தனுசு ராசிக்கான மாத ராசிபலன்கள், ஆகஸ்ட் 2021

தனுசு

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction July 2021

  • Share this:
    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை:தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ)  - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரகமாற்றங்கள்:

    05-08-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    12-08-2021 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-08-2021 அன்று சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    23-08-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த சூழ்நிலையிலும் நேர்மையை தவற விடாத தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு  ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே கவனம் தேவை. கண்நோய், பித்தம், வாதம்  சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு  இருக்கும். திடீர் கோபம் உண்டாகும்.

    தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம்  உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.  பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.  உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண்  பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர்  வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால்  செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம்  பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

    அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

    கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

    மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன்  கேட்டு படிப்பது நல்லது.  வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

    பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம்  சேரும்.

    அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன், சனி

    சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9

    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29
    Published by:Vaijayanthi S
    First published: