கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்:
06-12-2022 அன்று சுக்ர பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-12-2022 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
வாக்குவாதத்தில் தனது அறிவுத் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களை தன் வசப்படுத்தும் மிதுன ராசியினரே நீங்கள் அடுத்தவருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் அஷ்டமபாக்கியாதிபதிபதி சனி ஐந்தில் அமர்வதால் பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும்.
மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
திருவாதிரை:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
டிசம்பர் மாத பலன்கள்
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மேஷ ராசி - பதவி உயர்வு கிடைக்கும்..!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: ரிஷப ராசி - குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்..!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கடக ராசி - பொருளாதார வளம் மேம்படும்..!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: சிம்ம ராசி - வீடு, மனை வாங்கும் யோகம்.. முழு பலன்கள்!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கன்னி ராசிக்கு என்ன பலன்? முழு பரிகார பலன்கள்!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: துலாம் ராசிக்கு பலன்கள் எப்படி? முழு கிரகநிலை பலன்கள்!
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கு? பலன் பரிகாரங்கள் என்ன?
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: தனுசு ராசிக்கு பலன்கள் எப்படி - முழு கிரகநிலை பலன்கள்
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம்.. கவலை வேண்டாம்
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.. கொடுக்கல் வாங்கலில் கவனம்
Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மீன ராசி - சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும்...!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Rasi Palan, Tamil News