ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

டிசம்பர் மாத பலன்கள்: மீன ராசி - சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும்...!

டிசம்பர் மாத பலன்கள்: மீன ராசி - சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும்...!

மீன ராசி

மீன ராசி

December Monthly Rasi Palan | டிசம்பர் மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரகநிலை:

ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் சந்திரன் - என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

06-12-2022 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2022 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த ஒரு பிரச்சனைகளையும் சமாதானமாக பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த மீன ராசியினரே நீங்கள் அனுபவ அறிவு மிக்கவர்.

இந்த மாதம் உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு.பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு.செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.

உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.

தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினர் சீரான நிலை இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகளுக்கு மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும்.

மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகனம் மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

ரேவதி:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

டிசம்பர் மாத பலன்கள்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மேஷ ராசி - பதவி உயர்வு கிடைக்கும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: ரிஷப ராசி - குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மிதுன ராசி - வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கடக ராசி - பொருளாதார வளம் மேம்படும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: சிம்ம ராசி - வீடு, மனை வாங்கும் யோகம்.. முழு பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கன்னி ராசிக்கு என்ன பலன்? முழு பரிகார பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: துலாம் ராசிக்கு பலன்கள் எப்படி? முழு கிரகநிலை பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கு? பலன் பரிகாரங்கள் என்ன?

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: தனுசு ராசிக்கு பலன்கள் எப்படி - முழு கிரகநிலை பலன்கள்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம்.. கவலை வேண்டாம்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.. கொடுக்கல் வாங்கலில் கவனம்

First published:

Tags: Astrology, Rasi Palan, Tamil News