ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

டிசம்பர் மாத பலன்கள்: தனுசு ராசிக்கு பலன்கள் எப்படி - முழு கிரகநிலை பலன்கள்

டிசம்பர் மாத பலன்கள்: தனுசு ராசிக்கு பலன்கள் எப்படி - முழு கிரகநிலை பலன்கள்

தனுசு ராசி

தனுசு ராசி

December Monthly Rasi Palan | டிசம்பர் மாத ராசிபலன்களை கணித்து தந்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரகநிலை:

ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

06-12-2022 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2022 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-12-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தன்னடக்கம் மிகுந்த தனுசு ராசியினரே நீங்கள் எதையும் மறைத்து பேசமாட்டீர்கள். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.

வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம்.

சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். குழந்தையில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும்.

தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.

பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும்.

மூலம்:

இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்:

இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 04, 05, 06

டிசம்பர் மாத பலன்கள்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மேஷ ராசி - பதவி உயர்வு கிடைக்கும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: ரிஷப ராசி - குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மிதுன ராசி - வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கடக ராசி - பொருளாதார வளம் மேம்படும்..!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: சிம்ம ராசி - வீடு, மனை வாங்கும் யோகம்.. முழு பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கன்னி ராசிக்கு என்ன பலன்? முழு பரிகார பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: துலாம் ராசிக்கு பலன்கள் எப்படி? முழு கிரகநிலை பலன்கள்!

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கு? பலன் பரிகாரங்கள் என்ன?

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம்.. கவலை வேண்டாம்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.. கொடுக்கல் வாங்கலில் கவனம்

Also Read : டிசம்பர் மாத பலன்கள்: மீன ராசி - சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும்...!

First published:

Tags: Astrology, Rasi Palan, Tamil News