முகப்பு /செய்தி /ஆன்மிகம் / செல்வ வாக்கு: இந்த ராசியினருக்கு தொழில் ரீதியாக இன்று மிகச்சிறந்த நாளாக அமையும்

செல்வ வாக்கு: இந்த ராசியினருக்கு தொழில் ரீதியாக இன்று மிகச்சிறந்த நாளாக அமையும்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 27) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீண்ட நாட்களாக இருந்த மனக் குழப்பங்கள் நீங்கும். முழு ஆர்வத்துடன் வேலை செய்வீர்கள். சொத்து தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது புத்திசாலித்தனமாக செயல்படுங்கள், அப்போதுதான் லாபம் கிடைக்கும். இல்லையெனில் பெரிய நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

ராசியான எண்: 3 ராசியான நிறம்: பாதாமி (பாதாம்)

பரிகாரம்: பசுவுக்கு சப்பாத்தி கொடுக்கவும்.

ரிஷபம்:

சுபகாரியங்களுக்கான செலவுகள் அதிகரிப்பதால், கடன் வாங்க வேண்டி வரும். உங்களுக்கு பரிச்சயமில்லாதவர்களை சந்திப்பீர்கள். நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிவடையும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணியிடத்தில் உயரதிகாரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். காதலிப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ராசியான எண்: 4 ராசியான நிறம்: வெள்ளை

பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

மிதுனம்:

இன்று பண வரவு உறுதி. உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் துறையில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரும்.

ராசியான எண்: 10 ராசியான நிறம்: வெளிர் சிவப்பு

பரிகாரம்- சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

கடகம்:

அலுவலகத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. ஆன்மீக ரீதியான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். காதலன் / காதலி தொடர்பாக மனதில் சந்தேகங்கள் தோன்றக்கூடும்.

ராசியான எண் : 3 ராசியான நிறம்: ஆரஞ்சு

பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

சிம்மம்:

ராசியானக் காற்று உங்கள் பக்கம் வீசுகிறது. பணம் சம்பாதிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இடமாற்றம் சாதகமாக இருக்கும். உறவினர்களுடன் உறவு மேம்படும்.

ராசியான எண்: 7, ராசியான நிறம்: குங்குமப்பூ

பரிகாரம்: சிவப்பு நிற பழங்களை ஏழைக்கு தானம் செய்யுங்கள்.

கன்னி:

கல்வி தொடர்பான வேலைகள் அனைத்துமே சாதகமாக இருக்கும். யாருடனாவது கருத்து வேறுபாடு இருந்தாலும், உங்கள் பேச்சில் கண்ணியம் குறையக் கூடாது. அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பணம் ஈட்ட கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ராசியான எண்: 1, ராசியான நிறம்: செந்தூரம்

வண்ண பரிகாரம்: அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுங்கள்.

துலாம்:

நீங்கள் முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். அலுவலகத்தில் வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டியிருந்தாலும் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையென்றால், நீங்கள் நஷ்டப்பட நேரிடலாம்.

ராசியான எண்: 10 ராசியான நிறம்: மெரூன்

பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியாக இன்று மிகச்சிறந்த நாளாக அமையும்; விசேஷ ஒப்பந்தம் ஏதேனும் முடிக்கப்பட வேண்டும் என்றால், அதை இன்று நிறைவேற்றலாம். இது உங்களுக்கு லாபமும் பெற்றுத்தரும். காதலிப்பவர்களிடம், உணர்வுபூர்வமான பிணைப்பு வலுப்படும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

ராசியான எண்: 5 ராசியான நிறம்: கிரீம்

பரிகாரம் - பசுவிற்கு புல் அல்லது கீரையை கொடுக்கவும்.

தனுசு:

இன்று நீங்கள் செய்து முடிக்கும் புதிய திட்டங்கள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். சட்ட ரீதியான எந்தப் பிரச்சனை இருந்தாலும், அதில் வெற்றி பெறலாம். திருமண உறவில், தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: ஊதா

பரிகாரம்: துர்க்கை அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.

மகரம்:

இன்று குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு காணப்படலாம். அதே போல, பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. காதலிப்பவர்களுக்கு இன்று ராசியான நாள். சம்பளம் வாங்கும் ஊழியர்கள், அலுவலகத்தில் கடினமாக உழைப்பதன் மூலம், மேலதிகாரிகளை திருப்திப்படுத்தலாம்.

ராசியான எண்: 8 ராசியான நிறம்: பச்சை

பரிகாரம்: ஒரு ஏழைக்கு வெள்ளை நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.

கும்பம்:

இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது பெரியவர்கள் வைத்த அன்பு எப்போதும் மாறாது. குழந்தைகளும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

ராசியான நிறம்: வெள்ளை, ராசியான எண்: 3

பரிகாரம்: பறவைக்கு தானியம் கொடுங்கள்.

மீனம்:

புதிய வேலைகள் மற்றும் புதிய வியாபார ஒப்பந்தங்கள் கைக்குக் கிடைக்கலாம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சமாளித்து விடும் அளவுக்கு இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்கள் வேலையை புத்திசாலித்தனமாக தொடங்கினால், விரைவில் செய்து முடிக்க முடியும். அன்றாட வேலைகளை முடிப்பதில் எந்தத் தடையும் ஏற்படாது.

ராசியான நிறம்: நீலம் ராசியான எண்: 8

பரிகாரம்: கருப்பு நாய்க்கு இனிப்பு ஏதாவது கொடுங்கள்.

First published:

Tags: Astrology, Money, Rasi Palan