மேஷம்:
குடும்பம் சம்பந்தப்பட்ட வேலைகள் நிறைவடையும் நாளாக அமையும். மற்றவர்களுடன் உரையாடும் போது பொறாமை காட்டுவதைத் தவிர்க்கவும். ஆன்மீகப் பணிகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்
பரிகாரம் - சிவபெருமானுக்கு நீர் அபிஷேகம்.
ரிஷபம்:
இதுவரை தடைபட்ட வேலைகள் முடிவடையும். பணம் சம்பாதிக்க உழைப்பை அதிகரிக்க வேண்டும். உங்களது மனதில் ஏற்படும் நெகடிவ் எண்ணங்களுக்கு ஒரு போதும் இடம் கொடுத்தாதீர்கள். நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். உங்களது குடும்ப வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண் – 5
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு
பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுதல்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் செலவுகள் அதிரிக்கும் நாளாக அமையும். நிதி நிலைமையில் குழப்பம் ஏற்படும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலனில் அக்கறையுடன் இருங்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாளாக அமையக்கூடும்.
அதிர்ஷ்ட எண்: 9,
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
பரிகாரம் - ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்.
கடகம்:
நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கவலைகள் நீங்கும். உங்களது வேலைகளை முழு ஆர்வத்துடன் செய்யுங்கள். சொத்துத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது புத்திசாலித்தனத்துடன் இருந்தால் மட்டுமே லாபம் பெறுவது சாத்தியமாகும். இல்லையென்றால் தேவையில்லாத நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு
பரிகாரம் - பசுவிற்கு ரொட்டி கொடுக்கவும்.
சிம்மம்:
சுபகாரியங்களுக்கானச் செலவுகள் அதிகரிப்பதால் வெளியில் கடன் வாங்க வேண்டிய நிலை வரும். இதுவரை முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் முடிவடையும். உங்களது ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தில் உயரதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
பரிகாரம் - ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள்.
கன்னி:
பண ஆதாயத்திற்கான சாத்தியம் உள்ளது. மற்றவர்களிடம் உங்களது மரியாதை மேலும் அதிகரிக்கும். நீங்கள் பணிபுரியும் துறையில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களது நடத்தையில் கோபத்தைக் காட்டினால் நஷ்டம் ஏற்படும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மன அமைதியைத் தரும்.
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
பரிகாரம் – ஏழைகளுக்கு பழங்களைத் தானம் செய்யும். ( அதிலும் சிவப்பு நிற பழங்களால் கூடுதல் நன்மைக் கிடைக்கும் )
துலாம்:
உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. மதம் சார்ந்தப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும். காதலர் தொடர்பாக மனதில் சில சந்தேகங்கள் எழக்கூடும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.
விருச்சிகம்:
உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவளிக்கும். பணம் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இடமாற்றம் சாதகமாக அமைவதோடு உறவினர்களுடன் உறவு வலுவாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
பரிகாரம்- ஏழைகளுக்கு பழங்களைத் தானம் செய்யுங்கள்.
தனுசு:
கல்வித் தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். யாருடனும் கருத்து வேறுபாடு இருக்கலாம். உங்கள் பேச்சில் கண்ணியமாக இருந்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். பணத்தைப் பெற விசேஷ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1,
அதிர்ஷ்ட நிறம்: செந்தூரம்
பரிகாரம்- அனுமன் வழிபாடு
மகரம்:
நீங்கள் முழு ஆர்வத்துடன் பணியாற்றும் சூழல் ஏற்படுவதால் உங்களது அலுவலகத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதில் தாமதம் வேண்டாம். நீங்கள் தாமதப்படுத்துவதன் மூலம் லாப வாய்ப்பை இழக்க நேரிடும்.
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.
கும்பம்:
தொழில் ரீதியாக இன்று சிறப்பான நாளாக இருக்கும். எந்தவொரு சிறப்பு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும். காதலனுக்கும் காதலிக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பு வலுவாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
பரிகாரம் - பசுவிற்கு புல் அல்லது கீரையை கொடுக்கவும்.
மீனம்:
எதிர்காலத்திற்கு தேவையான பயனுள்ள விஷயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள். எந்தவொரு சட்ட பிரச்சனைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களது திருமண உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
பரிகாரம்: துர்க்கை கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Money, Rasi Palan