Rasi Palan : மிதுனம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

மிதுனம்

மிதுனம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்): தனது நிதானத்தாலும், புத்திசாலித்தனமான செய்கைகளாலும் வெற்றிபெறும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பல முறை யோசித்துச் செயல்படுவது நன்மை தரும். பணம் சார்ந்த பிரச்ச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

    பரிகாரம்: முருகனுக்கு விரதம் இருந்து வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: