Rasi Palan : மேஷம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

மேஷம்

மேஷம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்): எடுத்த வேலையை வேகத்துடனும், விவேகத்துடனும் சேர்த்து செய்யும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்டவர்கள். இந்த வாரம் வீடு, மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். அதே வேளையில் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் முற்றும் முழுவதுமாக நீங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் அகலும்.

    தொழிலதிபர்களுக்கு தொழிலில் நல்ல ஏற்றம் காணப்படும். பங்கு தாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வுநிலை மாறி சீரான வேகம் பிடிக்கும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், எதிர்பார்த்த பணியிடமாற்றம், பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான வேலை அமையும்.
    மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

    பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ச்சனை செய்து வழிபடவும்.
    Published by:Vaijayanthi S
    First published: