Rasi Palan : மேஷம்  - இந்த வார ராசிபலன் (ஜுலை 18முதல் ஜுலை 24வரை)

மேஷம்

மேஷம்  ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம்  (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): கடின உழைப்பை கண்டு அஞ்சாத மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று  வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண் டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.

    .தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங் கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கள் அதிகரிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்ப வர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார் கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனு சரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற் படலாம். ஆயுதம், நெருப்பு ஆகிய வற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

    பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

    மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

    பரிகாரம்:  திருத்தணி முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: