Rasi Palan : மேஷம் - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

மேஷம்

மேஷம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்): இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த வீண்கவலை நீங்கும். சுணங்கிக் கிடந்த காரியங்களில் வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு தன சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள்.

    மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி;

    பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: