Rasi Palan : மீனம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 12முதல் ஜுலை 17வரை)

மீனம்

மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய மீனராசியினரே நீங்கள் கற்பனை வளமும் கலையார்வ மும் மிக்கவர்கள். இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர் கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டா கும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல்  வியாபாரம் இருந் தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

    குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண் டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

    மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

    பரிகாரம்: குரு ராகவேந்திரரை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும்.
    Published by:Vaijayanthi S
    First published: