Rasi Palan : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மே 17 முதல் மே 23 வரை

மீனம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
    இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

    நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.

    அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

    சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்வாதிகளுக்கு தைரியம் கூடும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
    பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: