மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
இந்த வாரம் உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள்.
காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.
உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகளுக்கு அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
பரிகாரம்: வியாழகிழமை அன்று அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று குரு பகவானை வணங்கி விட்டு வரவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rasi Palan