• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்):

    விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த மகர ராசி அன்பர்களே, உங்கள் பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும். இந்த வாரம்  எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும்.  அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.  எதிர்ப்புகள் நீங்கி உதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

    மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

    பரிகாரம்: சிவன், நவகிரகங்களை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: