Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

மகரம்

மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம்,  அவிட்டம் 1,2 பாதம்):  இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

    தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்கும். கலைத்துறையினர் உற்சாகமாக இருப்பீர்கள்.

    அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.
    Published by:Vaijayanthi S
    First published: