Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை)

மகரம்

மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம்

    இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம். குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும்.

    பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்க நினைப்பீர்கள். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வந்து குவியும். பலவழிகளிலும் வருமானம் வந்து சேரும். மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

    பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.

     

     
    Published by:Vaijayanthi S
    First published: