முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை

Rasi Palan : மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன் | மே 17 முதல் மே 23 வரை

மகரம்

மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம்.

மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குருவின் இருப்பால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள்.

பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும்.  குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும்.

வீண் செலவுகள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வணங்கி வர மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Horoscope 2021, Rasi Palan