Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (மே 30 முதல் ஜூன் 5 வரை)

மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்): எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய மகர ராசியினரே, இந்த வாரம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

    குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

    பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

    மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

    பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: