• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

Rasi Palan : மகரம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்): இந்த வாரம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவல கத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  இருக் கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.

    பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர் வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்.

    மேலும் படிக்க.. நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

    பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: